லாஸ்ஏஞ்சல்ஸ்: 2023 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, மார்ச் இரண்டாவது வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், டால்பி திரையரங்கில் கோலாகலமாக துவங்குகிறது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயர் பட்டியல் இன்றுவெளியானது. இதில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளார். இவருடன் தவானே ஜான்சன், மிகைல் பி ஜோர்டன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement