தமிழகத்தில் தான் வெளிமாநிலத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் கலைக் கல்லூரி வளகத்தில் 2 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா காலங்களில் போக்குவரத்து செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ்நாடு அனைவருக்குமான மாநிலமாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பீகார் அதிகாரிகள் தமிழக அரசின் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.