சென்னை: வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வட மாநிலங்களிலும் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலோ, அச்சுறுத்தலோ தமிழகத்தில் இல்லை என்றும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எடிட்டிங் செய்து பரப்பப்படுவதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது. காவல்துறை தலைவர் […]