சென்னை : சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனைய சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த நிஷாந்த் என்பவர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ₹68 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் நிஷாந்த் மீது அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து நிஷாந்த் அவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டது.
