கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி: ஒப்பந்தத்தை நீட்டிக்க துருக்கி கடுமையான முயற்சி


உக்ரைன் ரஷ்யா இடையிலான கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் துருக்கி செயல்பட்டு வருவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் Mevlut Cavusoglu தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா தானிய ஒப்பந்தம்

தானிய உற்பத்தியில் முன்னணி நாடுகளாக திகழும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், உலக அளவில் மிகப்பெரிய தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து உக்ரைனில் இருந்து தானியங்களை வெளியேற்றும் புதிய ஒப்பந்தம் ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டு தானியம் வெளியேற்றப்பட்டது.
 

கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி: ஒப்பந்தத்தை நீட்டிக்க துருக்கி கடுமையான முயற்சி | Working To Renew Black Sea Grain Deal TurkeyReuters 

இந்த ஒப்பந்தம் மீண்டும் நவம்பரில் நீட்டிக்கப்பட்டது, இந்த நீட்டிப்பு தற்போது மார்ச் 18ம் திகதியோடு காலாவதியாக உள்ளது.

தானிய ஒப்பந்தம் தொடர முயற்சி

   
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வரும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பேசிய துருக்கியின் வெளியுறவு அமைச்சர் Mevlut Cavusoglu, தானிய ஏற்றுமதியை குறித்து உரையாற்றினார்.

அதில் “கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை சுமூகமாக செயல்படுத்தவும் மேலும் நீட்டிக்கவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி: ஒப்பந்தத்தை நீட்டிக்க துருக்கி கடுமையான முயற்சி | Working To Renew Black Sea Grain Deal Turkey

அத்துடன் ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடன் நீட்டிப்பு முயற்சிகள் குறித்து விவாதித்ததாகவும் Cavusoglu தெரிவித்தார்.

இதற்கிடையில் புதனன்று ரஷ்யா தனது சொந்த விவசாய உற்பத்தியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டால் மட்டுமே கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொள்ளும் என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி: ஒப்பந்தத்தை நீட்டிக்க துருக்கி கடுமையான முயற்சி | Working To Renew Black Sea Grain Deal TurkeyReuters 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.