AR Ameen: பெரிய விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய மகன் ஏ.ஆர். அமீன்: பேரதிர்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் மகனும் தந்தை வழியில் இசை பயணம் செய்து வருகிறார். பல படங்கள், நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார் அமீன். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாடியபோது அலங்கார விளக்கு திடீர் என்று விழுந்திருக்கிறது.

அந்த விபத்தில் நூலிழையில் தப்பியிருக்கிறார் அமீன். மேடையில் பாடியபோது எடுத்த புகைப்படம் மற்றும் விளக்கு விழுந்தபோது எடுத்த புகைப்படம் ஆகியவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அமீன் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆண்டவன், என் பெற்றோர், குடும்பத்தார், நலம் விரும்பிகள், என் ஆன்மீக குரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களால் தான் நான் இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருக்கிறேன். மூன்று நாட்களுக்கு முன்பு நான் ஒரு பாடல் ஷூட்டிங்கில் இருந்தேன். என்ஜினியரிங், பாதுகாப்பு ஆகியவற்றை என் குழுவினர் கவனித்துக் கொள்வார்கள் என தைரியமாக இருந்தேன்.

View this post on Instagram A post shared by “A.R.Ameen” (@arrameen)
அதனால் நான் கேமரா முன்பு பாடுவதிலேயே கவனமாக இருந்தேன். கிரேனில் தொங்கவிடப் பட்டிருந்த அலங்கார விளக்கு திடீர் என்று மேடையில் விழுந்தது. அப்பொழுது நான் மேடையில் தான் இருந்தேன்.

சில இன்ச் இங்கு, அங்கு, சில நொடிகள் முன்போ தாமதமாகவோ விழுந்திருந்தால் அது எங்கள் தலைகளில் தான் விழுந்திருக்கும். நானும், என் குழுவினரும் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறோம். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அமீனின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ஏ.ஆர். ரஹ்மானோ, இறைவனின் அருள் என கமெண்ட் போட்டிருக்கிறார்.

கடவுளுக்கு நன்றி. நீங்கள் நல்ல ஆத்மா. கடவுள் உங்களை எப்பொழுதும் பாதுகாப்பார் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

பிரபலங்களும், ரசிகர்களும் கூறியிருப்பதாவது,

நல்ல வேளை நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள். மகிழ்ச்சி. கவனமாக இருக்கவும் அமீன். கடவுளுக்கு நன்றி. போஸ்ட்டை படிக்கவே பயமாக இருக்கிறது. ஏதாவது நடந்திருந்தால் எங்களால் தாங்கியிருக்க முடியாது. கடவுளுக்கு நன்றி. கடவுள் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருப்பார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் அவரின் ஸ்டைலிங் குழு பெரிய விபத்தில் இருந்து தப்பியிருக்கிறார்கள். கடவுள் அருளால் மும்பையில் இருக்கும் ஃபிலிம் சிட்டியில் நடந்த அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நம் துறையை முன்னேற்றும்போது இந்திய செட்டுகள் மற்றும் லொகேஷன்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. இந்த விபத்தால் நாங்கள் அனைவரும் ஆடிப் போயிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்த இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் குட்ஃபெல்லாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விசாரணை முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Silk Smitha: ஷூட்டிங் இல்லைனா என் வீட்டில் தான் இருப்பார் சில்க், எங்கு பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார்: கங்கை அமரன்

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ஓ.கே. கண்மணி படம் மூலம் பாடகரானார் ஏ.ஆர். அமீன். சச்சின்- எ பில்லியன் ட்ரீம்ஸ், 2.0 உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறார். தன் தந்தையின் இசையில் தொடர்ந்து பாடி வருகிறார் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.