மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் youtube பார்த்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குழந்தை கத்தியதால் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விடும் என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவித்ததாவது, நாக்பூர் பகுதியை சேர்ந்த அந்த பள்ளி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் தாக்கூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
சம்பவம் நடந்த அன்றைய தினம் தாக்கூர் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த மாணவி வீட்டில் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் தனது தாயையும், அக்கம்பக்கத்தினரையும் சிறுமி ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்றைய முந்தைய தினம் சிறுமி வீட்டுக்குள் ரத்தக்கரையுடன் அமர்ந்திருப்பதை பார்த்த தாய் அதிர்ந்துள்ளார். மேலும் அருகே குழந்தை ஒன்று இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்.
இதனை அடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் தாய் அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் போலீசருக்கு தகவல் தெரிவிக்கவே இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
மேலும் சிறுமி பெற்றெடுத்த குழந்தை கத்தி கூச்சலிட்டதால் கொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டாகிராம் காதலன் தாக்கூர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமுறைவாகியுள்ள அவரை தேடி வருகின்றனர்.