இப்படியே போனால் நாடு காணாமல் போய் விடும்! ஜப்பான் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா


ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்து வருவதை உணர்த்தும் வகையில் இப்படியே போனால் நாடு காணாமல் போய் விடும் என ஜப்பான் பிரதம மந்திரி மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய பேரழிவு

ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவது மிகவும் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இதனிடையே ஜப்பான் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா நடத்திய ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் “ இப்படியே போனால் நாடு காணாமல் போய் விடும்.

இப்படியே போனால் நாடு காணாமல் போய் விடும்! ஜப்பான் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா | Japan Population Goes Down President Fear@GETTYIMAGES

ஜப்பானின் புதிய பிறப்பு விகிதத்தின் மீது நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பேரழிவுகளைச் சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார். மேலும் இது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் நிலை உண்டாகும் எனவும் எச்சரித்துள்ளார். மக்களிடையே இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

இரட்டிப்பு செலவு

ஜப்பானில் பிறப்பு விகிதம் பிப்ரவரி 28 அன்று அதிகாரிகள் அறிவித்ததிலிருந்து மக்களிடையே அச்சமெழுந்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 1.58 மில்லியன் இறப்புகளும் 800,000க்கும் குறைவான பிறப்புகளும் பதிவாகியுள்ளன. அறிக்கைகளின்படி, குறைந்து வரும் பிறப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு இரட்டிப்பு செலவு செய்வதாக ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.

குறைந்த மக்கள் தொகை

நாட்டில் குறைந்து வரும் மக்கள் தொகையின் வேகம் அதிகரித்து வருகிறது. 65க்கு மேல் உள்ளவர்களின் விகிதம் கடந்த ஆண்டு 29 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை 124.6 மில்லியனாக குறைந்துள்ளது.

இப்படியே போனால் நாடு காணாமல் போய் விடும்! ஜப்பான் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா | Japan Population Goes Down President Fear@Reuters

2008 இல் 128 மில்லியனுக்கும் அதிகமான உச்சம் பதிவாகியுள்ளது.

பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறையவில்லை, அது நேராகக் கீழே செல்கிறது என்பதை மேல் சபை சட்டமன்ற உறுப்பினர் மோரி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார் . “இது படிப்படியாக வீழ்ச்சியடையவில்லை, ஒரேயடியாகக் கீழே செல்கிறது” என்று மோரி கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.