தருமபுரி: தருமபுரியில் உள்ள காப்புக்காடுகளில் நுழைவது, வன விலங்கை துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். சட்டவிரோத மின்வேலியால் வனவிலங்குகளை பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய நிலங்களில் வனத்துறை, வருவாய்துறை, மின்சாரத்துறை இணைந்து ரோந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
