குஜராத்: குஜராத் கடலோர பகுதியில் படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள 61 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஈரான் நாட்டினரின் படகில் சோதனை செய்யப்பட்டது. படகில் சோதனையிட்டபோது ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதை அடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
