ஐநா.,வில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய பாக்.,: பதிலளிக்க கூட தகுதியற்றது- இந்தியா பதிலடி| “False Propaganda”: India On Pak Foreign Minister’s Kashmir Remarks At UN

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஐக்கிய நாடுகள்: அமைதி, பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நடந்த ஐ.நா., பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தீங்கிழைக்கும் தவறான பிரசாரத்திற்கு பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது எனக்கூறியுள்ளது.

ஐ.நா., கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு இந்தியா உடனடியாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

latest tamil news

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பேசும் போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறியதாவது:

latest tamil news

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய அடிப்படை ஆதாரமற்ற அற்பமான மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட கருத்துகளை நான் நிராகரிக்கிறேன். பொய்யான மற்றும் தவறான பிரசாரங்களுக்கு பதிலளிப்பது கூட அவை தகுதியற்றவை. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.