டாக்கா, ”ரோஹிங்கியா முஸ்லிம்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள மியான்மர் அரசு தயாராக இல்லை,” என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2017ல் உள்நாட்டு போர் நடந்தது. அங்கிருந்து வெளியேறிய 11 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு மீண்டும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் மேலும் கூறியுள்ளதாவது:
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இவர்களை மீண்டும் மியான்மர் அனுப்ப அந்நாட்டுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம்.
ஆனால், அந்நாட்டு அரசு அளிக்கும் பதில் சாதகமாக இல்லை. இந்த மக்கள் தங்கள் சொந்த நிலத்துக்கு செல்வது தான் நியாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement