Robert Master: வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி.. ராபர்ட் மாஸ்டரின் தங்கை அதிரடி கைது!

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது மூத்த சகோதரி அல்போன்சா. நடிகையான இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ராப்ர்ட் மாஸ்டரின் மற்றொரு சகோதரி ஷோபா வசந்த். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளார்.

Dhanush: நான் நம்பின 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க… உருக்கமாக பேசிய தனுஷ்!

சென்னை கேளம்பாக்கத்தில் வசித்து வரும் ஷோபா சென்னை வளசரவாக்கத்தில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் மலேசியா, துபாய், கனடா போன்ற நாடுகளில் வேலை வாங்கி தரப்படும் என விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி பலரும் ஷோபாவின் அலுவலகத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தரும்படி விண்ணப்பித்துள்ளனர்.

தனது அதில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு இன்டர்வியூ நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேலை வாங்கி கொடுத்ததற்காக அவர்களிடம் இருந்து 74 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் நடிகை ஷோபா. பின்னர்தான் தெரிந்தது, ஷோபா நடத்திய இண்டர்வியூ, அவர் வழங்கிய பணி நியமன ஆணை அனைத்துமே போலியானது என்று.

Bayilvan Ranganathan: ராமாபுரம் தோட்டத்தில் ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? ரகசியத்தை உடைத்த பயில்வான்!

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஷோபாவின் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது 6 மாதத்தில் வேலை கிடைத்து விடும் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் சொன்னப்படி வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்தப்போது அவர் அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஷோபா மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஷோபா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். ஷோபாவுக்கு தெரியாமலேயே பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து அவரை nதடி வந்தனர். இந்நிலையில் சென்னை நொளம்பூர் பகுதியில் ஷோபா புதிய அலுவலகத்தை தொடங்கி வேலையை ஆரம்பித்திருந்தது தெரியவந்தது.

Amala Paul: சூர்யா பாடலுக்கு கவர்ச்சி உடையில் செம்ம ஆட்டம்… அமலா பாலின் ஹோலி வாழ்த்து!

மேலும் போன் நம்பர் உட்பட அனைத்தையும் ஷோபா மாற்றியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த ஷோபாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஷோபால் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஷோபாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஷோபா பல ஆண்டுகளாக பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.