பணஜி : கோவாவில் உள்ள மாதேஸ் வனவிலங்கு சரணாலயத்தில் சமீபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இந்த வனப்பகுதியில் பற்றிய தீ சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. கடந்த ஐந்து நாட்களாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புக்குழுவினர் வனத் துறையினர் கூட்டாகச் சேர்ந்து தீயை அணைத்து வரும் நிலையில் இந்திய விமானப் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் காட்டுத் தீ பரவியுள்ள துாரம் குறித்து கடற்படை ஹெலிகாப்டர்கள் வாயிலாக நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement