பிரபல நடிகர் பங்களாவுக்குள் 8 மணி நேரம் ஒளிந்த 2 பேர் கைது| 2 people who hid inside the famous actors bungalow for 8 hours were arrested

மும்பை, பிரபல நடிகர் ஷாருக்கான் பங்களாவுக்குள் புகுந்து, அவரது, ‘மேக்அப்’ அறைக்குள் எட்டு மணி நேரம் பதுங்கியிருந்த இரண்டு ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் மாநிலம் பரூச் நகரைச் சேர்ந்த பதான் சஹில் சலீம் கான், 22, ராம் ஷரப் குஷ்வாஹா, 22, ஆகிய இருவரும் நடிகர் ஷாருக் கானின் தீவிர ரசிகர்கள்.

அவரை சந்திக்க திட்டமிட்டு கடந்த வாரம் ஊரில் இருந்து மும்பைக்கு வந்தனர். ஷாருக் கானின் ‘மன்னாத்’ பங்களாவுக்குள் புகுந்த இருவரும், மூன்றாவது மாடியில் இருந்த மேக் அப் அறைக்குள் அதிகாலை 3:00 மணிக்கு நுழைந்தனர்.

காலையில் ஷாருக் கான் புறப்படும்போது, அந்த அறைக்கு வந்து விட்டுத்தான் செல்வார்.

அப்போது அவரைப் பார்த்து பேசி விடலாம் என திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் காலை, 10:30 மணிக்கு மேக்அப் அறைக்கு வந்த பங்களாவின் பராமரிப்பு பணி ஊழியர் சதீஷ், இருவரையும் பிடித்து விட்டார். இதனால், பங்களாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்து ஷாருக் கானும் அதிர்ச்சி அடைந்தார்.

ஷாருக் கானின் மேலாளர் கொடுத்த புகாரின்படி, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.