திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பெண் ஒருவர் மாடியில் தோட்டம் அமைத்து இயற்கை உரமிட்டு காய்கறி, கீரை வகைகளை வளர்த்து வருகிறார். அனைத்தும் கலப்படமாகிவிட்ட இன்றைய சுழலில் நஞ்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ண பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு வடிகாலாக அமைந்துள்ளது. மாடித் தோட்டம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த காயத்திரி வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை அறுவடை செய்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வருகிறார்.
செவிலியர் படிப்பை முடித்த இவர் உடல்நலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாடித் தோட்டம் அமைப்பது எப்படி என யு டியுப் மூலம் தெரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டை, பச்சை மிளகாய் முள்ளங்கி என காய்கறிகள் மட்டுமின்றி கீரை வகைகளும், மல்லி, ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளையும் இயற்கை உரமிட்டு வளர்த்து வருகிறார் காயத்திரி. விளைநிலங்கள் வீடுகளாக மாறிவரும் இன்றைய சுழலில் வீட்டையே விளைநிலமாக மாற்றிய காயத்திரியை சுற்றுவட்டார மக்கள் பாராட்டி வருகின்றனர்.