மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தனக்கு கடன்வழங்கிய இந்தியா சீனா உட்பட அனைத்து முக்கிய நாடுகளிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை இதுவரை பெற்றுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியம் ஏப்பிரல் 20ம் திகதி இலங்கைக்கான நான்குவருட நிதிஉதவி திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

சர்வதேச ஊடகமான ரொய்ட்டருக்கு வழங்கிய செய்தியியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணயநிதியம் ஆறுமாத்திற்கான முழுமையான பிணையெடுக்கும் பொதி குறித்து ஆராய்வதற்கு முன்னர் இலங்கை ஏப்பிரல் மாதம் கடன்மறுசீரமைப்பு மூலோபாயத்தை அறிவிக்கும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்.

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தனக்கு கடன்வழங்கிய இந்தியா சீனா உட்பட அனைத்து முக்கிய நாடுகளிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை இதுவரை பெற்றுள்ளது.

நான்குவருட நிதி உதவி திட்டத்திற்கு அனுமதி

மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Central Bank Of Sri Lnka Governer

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியம் ஏப்பிரல் 20ம் திகதி இலங்கைக்கான நான்குவருட நிதி உதவி திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

ஏழு தசாப்தகாலத்தில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொண்ட பல மாத முயற்சிகளின் விளைவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி

பணியாளர் மட்ட உடன்படிக்கை வெளியானவுடன் அதனை பார்த்தீர்கள் என்றால் அதில் கடன் மறுசீரமைப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு காணப்படும், அதில் எங்களின் நடுத்தர கால இலக்குகளும் காணப்படும்.

இதன் காரணமாக நாங்கள் ஏப்ரல் மாதத்தில் நீண்டகால நடுத்தர இலக்குகளை எப்படி அடையப்போகின்றோம் என்பதை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

You My Like This Video



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.