வட இந்திய தொழிலாளர்கள் வதந்தி வீடியோ: தமிழ்நாடு காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகள்!

வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோ, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், ஆன்லைன் மூலம் பண மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடியோ பதிவு பீதி தொடர்பாக காவல்துறை, தொழில் துறை சிறப்பாக கையாண்டு சுமுகமாக்கியுள்ளனர். வதந்தி குறைந்துள்ளது. கோவை சரகத்தில் தொழில் முனைவோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை பேட்ரோல் அதிக அளவில் தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். சிசிடிவி கேமரா கண்காணிப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கே தொடர்பில்லாத வீடியோக்கள் பரப்பி விடப்படுகிறது. அது தொடர்பான புலண்விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ ஏன் வதந்தியாக பரப்பப்படுகிறது என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ஹோலிப் பண்டிக்கைக்காக தொழிலாளர் சென்றுள்ளனர். ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரிகள் கமிட்டி மூலமாக பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் கள நிலவரத்திற்கு ஏற்றவாறு காவல்துறை கையாள்கிறது. குற்றத்திற்காக வலைத்தளங்கள் பயன்படுத்தினால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

ஆன்லைன் பணமோசடி!

அடையாளம் தெரியாத நபர்கள் மொபைலில் லிங்க் அனுப்பினால் எதிர்வினை ஆற்ற வேண்டாம். காவல்துறைக்கு அழைக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.