'சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'..? பிரஷாந்த் கிஷோர் பாய்ச்சல்..!

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

குறித்து பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் ட்வீட் போட்டிருப்பது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இணையத்தில் பரப்பப்பட்ட போலி வீடியோக்கள் விவகாரம் நாடளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அந்த வீடியோக்கள் போலி என்று தெரிய வந்ததையடுத்து, இதில் சம்மந்தப்பட்டவர்களை தமிழக காவல்துறை தேடி பிடித்து கைது செய்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்களே தாங்கள் இங்கு நிம்மதியாக இருப்பதாகவும், எங்களை பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தங்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரம் கிளப்பிய சூடு இன்னும் தமிழகத்தில் தணியாமல் இருந்து வருகிறது. வீடியோக்கள் போலி என்றாலும் வட மாநில தொழிலாளர்களை பற்றி அரசியல் கட்சிகள் விமர்சித்து வருவதை பாஜகவினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூக நிபுணரும் முன்னாள் ஐபேக் நிறுவனத்தின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் சீமானை கண்டித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பரப்பிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ” என பிரஷாந்த் கிஷோர் ட்வீட் போட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தற்போதைய இந்திய அரசியலில் உற்றுநோக்கக்கூடியவராக இருக்கும் பிரஷாந்த் கிஷோர் மாநிலங்களில் உள்ள முதன்மையான கட்சிகளை பற்றிக்கூட பேசுவதில்லை. 2021-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி அவர் வகுத்த தேர்தல் உத்திகள் வெற்றியையும் பெற்றுத் தந்தது. இந்த நிலையில், வட மாநில விவகாரத்தில் சீமான் மீது குற்றம்சாட்டியிருப்பது தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது. வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், திமுக தரப்பில் நாம் தமிழர் கட்சி சீமானை கை காட்டி வருகின்றனர்.

” இந்தி மொழி திணிப்பையும், அரசு வேலைகளில் இந்தி காரர்களை நுழைப்பதைத்தான் திமுக எதிர்கிறதே தவிர எளிய தொழிலாளர்களை இல்லை என்று திமுகவினர் கூறுகின்றனர். மேலும், வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு ஆரம்பமே சீமான்தான் என்றும் சீமானை கண்டித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர். இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் திடீரென சீமான் வீடியோவை பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருப்பது நாம் தமிழர் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.