பரமக்குடி பள்ளி மாணவி பலாத்காரம்; அன்பு தம்பி கைது..சீமான் அண்ணன் கப்சிப்.!

பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபாகர் என்பவர் சீமானுக்கு நெருக்கமானவர் ஆவார். ஆனால் அது குறித்து

மௌனம் காப்பது பேசு பொருளாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாத 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கயல்விழி என்ற பெண், கடந்த டிசம்பர் மாதம் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலர் சிகாமணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

43 வயதான சிகாமணி, பள்ளி மாணவிக்கு உதவுவதாக கூறி பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த சிகாமணியின் நண்பரான மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் புதுமலர் பிரபாகர் என்பவருக்கும் கயல்விழி மாணவியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து பிரபாகரனும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி குறித்து கேள்விபட்ட பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்த ஜவுளிகடை ஓனர் ராஜா முகமதுவும் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்படியாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பள்ளிக்குச் செல்லவிடாமல் ஏமாற்றி கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளனர்.

இத்தனை பேர் பலமுறை மாணவியை சீரழித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, புதுமலர் பிரகயல்விழி, அன்னலட்சுமி என்கிற உமா என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய இருவரும் இதுபோல் பலரிடமும் பேசி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளும் தரகர்களாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

இது குறித்து கே பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘இக்கொடூர பாலியல் வன்முறையில் நகரத்தின் பல முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதும், காவல்துறையில் உள்ள சிலரின் தொடர்பும் இருப்பதாகவும் தெரிய வருகிறது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என கூறினார். அதைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றினார்.

இந்தநிலையில் சீமானின் மேடையில் பேசிய, சீமானின் தம்பியாக தன்னை அறிவித்து கொண்ட மறத்தமிழர் சேனை அமைப்பின் தலைவர் புதுமலர் பிரபாகர் குறித்து சீமான் மௌனம் காப்பது பேசுபொருளாகியுள்ளது. அரசியலில் பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்குவதாகவும், தமிழர்களின் மொத்த பிரதிநிதியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் செய்து வரும் சீமானை, இந்த விவகாரத்தில் பல முற்போக்குவாதிகள் கண்டித்து வருகின்றனர்.

முதுகுளத்தூரில் சீமான் அமைத்து கொடுத்த மேடையில், சாதி வாரி கணக்கெடுப்பு கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் புதுமலர் பிரபாகர் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இது குறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘பரமக்குடியில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள புதுமலர் பிரபாகரன் என்கிறவன் குடிதேஷ் கோமாளி சீமானின் நண்பர் மற்றும் சீமான் அவர்களின் கனவான சாதிவழி தேசியத்தின் கொள்கைபரப்பு செயலாளர்!’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.