லடாக்,உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை சிகரம், லடாக்கில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து ௧௭,௭௧௬ அடி உயரத்தில் உள்ள இங்கு, ‘மைனஸ் டிகிரி’ தட்பவெப்பம் நிலவுவதால், பொதுவாகவே இங்கு வசிப்பது சிரமம்.
ஆனால், இந்த பனிமலை சிகரத்தில் நம் ராணுவ வீரர்கள் ஆண்டு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு முதல்முறையாக கேப்டன் ஷிவா சவுஹான் என்ற பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த ஷிவா சவுஹான், சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 2021 மே மாதம் ராணுவத்தில் இணைந்தார்.
சியாச்சின் சிகரத்தில் பணியாற்றுவதற்காக, சியாச்சின் போர் பள்ளியில் இவருக்கு ஒரு மாத கடின பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின் தற்போது பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சியாச்சின் பனிமலை சிகரத்தில் பணியாற்றப் போகும் முதல் பெண் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ராணுவத்தில் வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கியுள்ளன.சியாச்சின் போன்ற சிகரத்தில் பணியாற்ற சொன்னாலும், அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement