கொழும்பு, :இலங்கையில் 40 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சடிக்க, இந்தியாவின் நிதியுதவியை அந்நாடு பயன்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு அடிப்படை தேவைக்கே அந்நாட்டு மக்கள் கடும் சிரமப்பட்டனர்.
மருந்து, உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தியா உதவியாக வழங்கியது.
இதுதவிர, 100 கோடி ரூபாய் கடனாக வழங்கியது. அந்த நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் செலவழித்து, 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.
இந்த தகவலை, கொழும்பு நகரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் உறுதி செய்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement