பென்னாகரம்: பென்னாகரம் அருகே நாய்களிடமிருந்து தப்பித்து ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நீர்குந்தி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக 3 வயது பெண் குட்டி யானை ஒன்று சுற்றி வந்தது. நேற்று காலை இந்த குட்டி யானையை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியுள்ளன. தப்பி ஓடிய குட்டி யானை 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தவித்தது. தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து, பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். அதை லாரியில் ஏற்றிச்சென்று ஒகேனக்கல் வனத்தையொட்டியுள்ள ஒட்டப்பட்டியில் விடுவித்தனர்.
