கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்! அதிர்ச்சியடைந்த மணமகன்


தெலுங்கானாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு மணமகள் ஒருவர் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கூடுதல் வரதட்சணை வேண்டும்

தெலுங்கானா மாநிலத்தில் மணப்பெண்ணுக்கு வழங்கப்படும் “தலைகீழ் வரதட்சணை” என்ற நடைமுறையை பின்பற்றும் குறிப்பிட்ட பழங்குடி வழக்கத்திற்கு ஏற்ப, மணமகனின் குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சத்திற்கு அதிகமான தொகையை கேட்டு மணமகள் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தியுள்ளார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு பத்ராத்ரி கொத்தகுடெமில்(Bhadradri Kothagudem)உள்ள அஸ்வராவ்பேட்(Aswaraopet) கிராமத்தில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்ல இருந்த மணமகள், திருமண உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்! அதிர்ச்சியடைந்த மணமகன் | Bride Seeks More Dowry Calls Off Wedding

இதையடுத்து போச்சாரம் பகுதியைச் மணமகன் வீட்டார், மணமகள் குடும்பத்தினர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று விளக்கம் கேட்டனர், அப்போது மணப்பெண் அதிக வரதட்சணை கேட்பதாக கூறியதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நிறுத்தப்பட்ட திருமணம்

இந்நிலையில் பிரச்சனை குறித்து விவாதிக்க இரண்டு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

ஆனால் மணப்பெண் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்! அதிர்ச்சியடைந்த மணமகன் | Bride Seeks More Dowry Calls Off WeddingiStock

மணமகளின் குடும்பம் மணமகனிடமிருந்து 2 லட்சம் வரதட்சணையாக பெற்று இருந்த நிலையில், அந்த பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக யார் மீதும் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.