திமுக எம்பியும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின் கணவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கனிமொழி. இவர் திமுகவின் மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கனிமொழியின் கணவர் அரவிந்தனுக்கு சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த திமுக எம்பி கனிமொழி சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். மேலும் தற்போது அரவிந்தனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பறு என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன