தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நடப்பாண்டுகாண பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7,88,064 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இதில் 4,20,356 மாணவர்களும், 3,67,77 மாணவிகளும், ஒரு பாலினத்தவரும் எழுத உள்ளனர்.
மேலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 43,200 அறை கண்காணிப்பாளர்களும், 3,500 பறக்கும் படையினர், 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் 135 தனித் தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன