28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு வாழும் மனிதன்!


கேரளாவில் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டுவருகிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

28 வருடங்கள் ஒரே உணவு

ஒரு சில நாட்களுக்கு ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் 28 வருடங்கள் ஒரே உணவை சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தெரிகிறது.

ஆனால், இந்தியர் ஒருவர் தனது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) சிகிச்சை அளிக்க கடந்த 28 ஆண்டுகளாக தேங்காயைத் தவிர வேறு எதையும் சாப்பிடவில்லை என கூறுகிறார்.

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு வாழும் மனிதன்! | Man Survives On Only Coconuts For 28 YearsBalakrishnan Palayi Photo Credit: SPECIAL ARRANGEMENT

பாலகிருஷ்ணன் பாலாயி

கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Palayi) தனது உடல் வலிமையை இழந்து, அசைய முடியாத நிலையில் இருந்துள்ளார். ஆனால், அவர் தேங்காயை உண்ணத் தொடங்கினார், அது அவருக்கு நன்றாக இருப்பதாக உணர்ந்துள்ளார. அதிலிருந்து இனி தேங்காயை மட்டுமே உணவாக சாப்பிடுவது என்று முடிவு செய்தார்.

தேங்காயில் கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உள்ளன. இது அவர் தனது வலிமையை மீட்டெடுக்க உதவியது, இப்போது அவர் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கிறார். தொடந்து தேங்காய் மட்டுமே உணவாக எடுப்பதாக, அவரிடம் கேட்பவர்களிடம் அவர் கூறியுள்ளார்.

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு வாழும் மனிதன்! | Man Survives On Only Coconuts For 28 Yearskeralakaumudi

ஒன்று தேங்காய் மற்றொன்று தேங்காய் தண்ணீர்

பாலாயிக்கு 35 வயதில் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிடும் போது, ​​அவர் தனது உணவை வாந்தி எடுப்பார். அவர் தனது நோயைக் குணப்படுத்த பல உணவுமுறைகளை முயற்சித்தார், ஆனால், அவரை நன்றாக உணரவைத்த இரண்டு விடயங்கள் ஒன்று தேங்காய், மற்றொன்று தேங்காய் தண்ணீர்.

“நான் தினமும் தேங்காய் சாப்பிடுவேன். என் குடும்பமும் தென்னை சாகுபடிக்கு மாறியது”, கடந்த 28 வருடங்களாக இப்படித்தான் வாழ்ந்து வருவதாக பாலாயி கூறுகிறார்.

தற்போது 64 வயதாகும் பாலாயி, தனது வயதுடைய பலரை விட ஆரோக்கியமாக உள்ளார். அவர் தனது குடும்ப பண்ணையை நிர்வகித்து வருகிறார், உடற்பயிற்சிகள் மற்றும் நீச்சல் பயிற்சி செய்கிறார், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

அவரது தேங்காய் உணவு முறை முதலில் 2019-ல் வெளியுலகிற்கு தெரியவந்தது, ஆனால் அன்றிலிருந்து இணையத்தில் அவரைப் பற்றிய செய்தி உலாவருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.