அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலார் டிடிவி தினகரன், அக்கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்பு செயலாளராக,
திரு.ம.கரிகாலன் அவர்கள்
(கழக பொறியாளர் அணி செயலாளர், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக செயலாளர்)
கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக
டாக்டர்.A.சதீஷ்குமார் அவர்கள்
(செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழக செயலாளர்)
கழக இளம்பெண்கள் பாசறை செயலாளராக,
திருமதி P.மேகலா அவர்கள்
(கழக தகவல் தொழில் நுட்ப மகளிர் பிரிவு செயலாளர்)
கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளராக,
திருமதி.S.ஜெஸிமா பானு அவர்கள்
(கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு துணைச்செயலாளர்)
இதுவரை கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.P.மேகலா, கழக தகவல்தொழில்நுட்ப மகளிர் பிரிவு துணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.S.ஜெஸிமா பானு ஆகியோர் அவரவர். வகித்துவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை நிலைய செயலாளர் கே.கே. உமாதேவன், செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளருமான கோமல் ஆர்.கே அன்பரசன் மற்றும் மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவில் இணைந்த நிலையில், போதிய நிர்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளது.