வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: ஓடும் ரயிலில் பெண் மீது போதை டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்த விவகாரம் ரயில்வே அமைச்சர் வரை சென்றால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா இடையே அகால் தக்கத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. சம்பவத்தன்று பெண் ஒருவர் தனது கணவர் ராஜேஷ் குமார் என்பவருடன் ஏ1 பெட்டியில் பயணித்தார். அப்போது மது அருந்தி போதையில் வந்த நபர் அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.அப்போது பெண் மீது திடீரென சிறுநீர் கழித்தார்.
![]() |
இது தொடர்பாக ரயில்வே போலீசில் கொடுத்த புகாரில், லக்னோவில் வைத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சிறுநீர் கழித்த நபர் பீஹாரைச் சேர்ந்த முன்னாகுமார் என்பதும் டிக்கெட் பரிசோதகர் என்பதும் தெரியவந்தது.
இந்த விஷயம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement