'ஸ்ரீ பெத்தம்மா தல்லி' கோயிலில் வழிபட்ட 'சாகுந்தலம்' குழு

குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'சாகுந்தலம்' படம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷனை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று(மார்ச் 15) ஐதராபாத், ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள 'ஸ்ரீ பெத்தம்மா தல்லி' கோயிலில் படக்குழுவினர் வழிபட்டு புரமோஷனை ஆரம்பித்தனர். பெத்தம்மா என்பதற்கு பெரிய தாய் என்று அர்த்தம். 11 கிராம தெய்வங்களில் ஒன்றான இவர் மிக உயர்ந்தவர் என்று கருதப்படுகிறார்.

இயக்குனர் குணசேகர், தயாரிப்பாளர் நீலிமா குணா, சமந்தா, தேவ் மோகன் ஆகியோர் நேற்று கோயிலுக்குச் சென்றனர். சமந்தா புடவை, வளையல் ஆகியவற்றை வைத்து வழிபட்டார். கோயிலில் சென்று வழிபட்டதை வீடியோவாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சமந்தா. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சமந்தா சமீப காலமாக இந்துக் கோவில்களுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தசை அழற்சி நோயிலிருந்து மீண்டதற்காக சமீபத்தில் பழனி முருகன் கோயில் படிக்கட்டுகளில் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.