வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ” வெளிநாட்டில் இந்தியாவை ராகுல் அவமானப்படுத்தினால், நாட்டின் குடிமகன்கள் என்ற முறையில் அமைதியாக இருக்க மாட்டோம்”, என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
பிரிட்டன் சென்றிருந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல், லண்டன் சென்ற போது அவர் பேசிய பேச்சு நாட்டை அவமதிப்பதாக உள்ளது. அவரது பொறுப்பற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: ராகுல் ஏதாவது கூறி, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், அவர் நாட்டை அவமானப்படுத்தினால், குடிமகன்கள் என்ற முறையில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

லண்டன் கருத்தரங்கில் பேசிய பேச்சிற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நமது ஜனநாயகம், நீதித்துறை மற்றும் நாட்டை அவர் இழிவுபடுத்தி உள்ளார். நமது நாட்டிற்கு எதிராக பேசியவர்களுக்கு எதிராக குரலை எழுப்ப வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement