பேசுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால்.. – மன வேதனையை வெளிப்படுத்திய திருச்சி சிவா

அமைச்சர் கே.என்.நேருவுக்கு

ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டியதற்காக திருச்சி சிவாவின் வீடு, கார் ஆகியவை நேற்று அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் புகுந்து சிவாவின் ஆதரவாளர்களையும் தாக்கினர்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை அறிவித்துள்ளது.

சம்பவம் நடந்த போது திருச்சி சிவா வெளிநாட்டில் இருந்தார். இன்று நாடு திரும்பிய அவர் திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.

இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.

நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான். இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டுள்ளார்.

நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன் – மனச்சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. இப்போது நான் பேசும் மனநிலையில் இல்லை. பின்னர் விரிவாக பேசுகிறேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.