புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், விரைவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைக்கப்படும் என மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். அதுபோல விரைவில் பெண்களுக்கு பிங்க் பேருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையத்து நிதிநிலை அறிக்கை மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவையின் இன்றைய அமர்வின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு […]
