கொரோனா வைரஸ் பிரச்சினைகளையடுத்து தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் மக்களை பெருமளவு அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இன்புளுயன்சா வைரஸ் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்த காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 4 நாட்கள் வரை கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகுகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிகப்படியாக காய்ச்சல் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் வந்து குவிக்கின்றன. சாதாரண நாட்களில் சளி, காய்ச்சல் பிரச்சனைகளுக்காக 250 பேர் வரை சிகிச்சை எடுத்து வருவார்கள்.
ஆனால், கடந்த சில நாட்களாக 300 இருந்து 400 பேர்களாக இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களில் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மற்றும் நெஞ்சு அடைப்பு ஏற்பட்டால் மட்டும் அவர்களுக்கு இன்புளுயன்சா சோதனை மேற்கொள்ளப்படுகிறது