தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கொரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மேலும் கடந்த மார்ச் 8ம் தேதி வரை கொரோனா தொற்று குறைவாக இருந்ததாகவும் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 462 பேருக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.