லக்னோ: உபி.யில் பிரபல தாதாவும் முன்னாள் எம்.பி.யுமான அதிக் அஹமதுவின் நெருங்கிய கூட்டாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
உ.பி.யில் ராஜூபால் என்ற எம்.எல்.ஏ. கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா அதிக் அஹமது, குஜராத்தில் சிறையில் உள்ளார். இவரது நெருங்கிய கூட்டாளியான வாஹித் அஹமது என்பவன் மீது பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் மடாவுந்த் என்ற பகுதியில் பதுங்கியிருந்த வாஹித் அஹமதுவை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பியோட முயன்றவனை போலீசார் சுட்டதில் குண்டு காயங்களுடன் போலீசில் பிடிபட்டான்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement