நோபளில் புதிய அரசு மீது மீண்டும் 20ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு| A vote of confidence on the new government in Noble will be held on the 20th again

காத்மாண்டு: நேபாள புதிய அரசின் மீது வரும் 20-ம் தேதி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் 2022 நவம்பர் 20ல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பிரதமராக புஷ் கமல் பிரசண்டா உள்ளார்.

கடந்த ஜன.10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு தப்பியது.

இந்நிலையில் மீண்டும் வரும் 20ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.