நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிர்ச்சியான மற்றும் வித்தியாசமான விஷயங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று நிர்வாணமாக நடு ரோட்டில் ஓடியுள்ளார்.இதனால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதை பார்த்த அந்த வாலிபர் அருகில் இருந்த கிராமத்தை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் மனநிலை சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.