Dhanush: தனுஷ் பள்ளியில் படிக்கும்போதே அப்படித்தான்..ஓப்பனாக பேசிய பாபா பாஸ்கர்..!

தனுஷ் என்ற பெயர் இன்று உலகளவில் பிரபலமான பெயராக விளங்கி வருகின்றது. தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் தனுஷ். இதையடுத்து கடந்தாண்டு திரையுலகை பொறுத்தவரை தனுஷிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.

தொடர் தோல்விகளினால் துவண்டிருந்த தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களின் வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த வாத்தி திரைப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

Pathu Thala: பத்து தல படத்தின் முதல் விமர்சனம் வெளியானது..படம் எப்படி இருக்கு தெரியுமா ?

ஆந்திராவில் விஜய்யின் வாரிசு பட வசூலை முந்தி சாதனை படைத்தது வாத்தி திரைப்படம். இவ்வாறு தொடர் வெற்றிகளை பெற்று வரும் தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் இப்படத்தை அடுத்து தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கவுள்ளார் தனுஷ். இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் டிவி நிகழ்ச்சியில் தனுஷை பற்றி பேசியது தற்போது செம வைரலாகி வருகின்றது. தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல ஹீரோக்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமானவர் தான் பாபா பாஸ்கர்.

தனுஷின் நெருங்கிய நண்பரான இவர் விஜய் டிவியில் இடம்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மேலும் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் பாபா பாஸ்கர் தன் பள்ளி பருவ காலம் பற்றி பேசியுள்ளார்

இதில் பேசிய பாபி பாஸ்கர், பள்ளியில் நான் சரியாகவே படிக்கமாட்டேன். ஆனால் விளையாட்டு மற்றும் நடனத்தில் நம்பர் ஒன்னாக இருந்தேன். அதன் காரணமாகவே நான் சரியாக படிக்கவில்லை என்றாலும் என்னை பள்ளியில் வைத்திருந்தார்கள்.

மேலும் தனுஷும் நானும் பள்ளியில் ஒன்றாக தான் படித்தோம். அவர் படிப்பில் டாப். எனவே தேர்வு வரும்போதெல்லாம் அவருக்கு பல உணவுகளை வாங்கி கொடுத்து அவரை நன்கு கவனிப்பேன். தேர்வில் அவரை பார்த்து எழுதி தான் நான் பாஸ் ஆனேன். எனவே என் வாழ்க்கையில் மட்டுமல்ல என்னை பள்ளியிலும் காப்பாற்றியவர் தனுஷ் தான் என உருக்கமாக பேசியுள்ளார் பாபா பாஸ்கர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.