கும்பகோணம்: கும்பகோணத்தில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி லாக்கரில் இருந்து தங்க நகைகள் இருக்கும் பெட்டி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஆர். கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் பயன்படுத்தி வந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நிதி நிறுவனம் என்ற பெயரில் பொதுமக்களிடம் ஆசை காட்டி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பிணையில் உள்ள நிலையில் இவர்களது லாக்கர்களில் இருக்கும், கும்பகோணம் பெசன் சாலையில் உள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 6 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வங்கி லாக்கரில் இருந்து முக்கிய ஆவணங்கள், தங்க மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்ற பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களையும் நகைகளையும் பெரிய இரும்பு பெட்டியில் வைத்து காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.