”வட கொரியா 33 வினாடிகளில் அமெரிக்காவை அழித்துவிடும்” சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள்


வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

33 வினாடிகள் போதும்

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் இராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

”வட கொரியா 33 வினாடிகளில் அமெரிக்காவை அழித்துவிடும்” சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் | North Korea Can Destroy America In 33 Seconds@NORTH KOREA STATE MEDIA

சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் “வட கொரியா மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை(ballistic missile) வைத்திருக்கிறது, அது அமெரிக்க மண்ணில் 33 நிமிடங்களில் அழிவை உண்டாக்கும்” என எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையில் இராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் வட கொரியாவும் அமெரிக்காவிற்கு எதிராக அச்சுறுத்தல்களை கொடுத்து வருகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணை

வடகொரியா தற்போது ஜப்பான் எல்லையில், பாலிஸ்டிக் என்ற அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை ஏவியது.

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பு அதை இடைமறிக்கத் தவறினால், வட கொரிய ஏவுகணை மத்திய அமெரிக்காவை 1,997 வினாடிகளில் அல்லது தோராயமாக 33 நிமிடங்களில் தாக்கும் என்று சீன பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Kim Jong-un/கிம் ஜாங் உன்@NORTH KOREA STATE MEDIA

2017 ஆம் ஆண்டு முதல் முறையாக வடகொரியாவால் ஏவப்பட்ட Hwasong-15 ஏவுகணை, சீன இதழான மாடர்ன் டிஃபென்ஸ் டெக்னாலஜியில்(modern defense technology) வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் தொகுப்பாகும்.

பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் டாங் யுவான்(dong yuvon)  தலைமையிலான ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை இரண்டு நிலைகள் கொண்ட அணுசக்தி திறன் கொண்ட ஆயுதமாகும், இது 13,000 கிமீ தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது என தெரிய வந்துள்ளது.

சீனாவின் இந்த ஆராய்ச்சி அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

”வட கொரியா 33 வினாடிகளில் அமெரிக்காவை அழித்துவிடும்” சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் | North Korea Can Destroy America In 33 Seconds@Representational

சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் வட கொரியா சம்பந்தப்பட்ட அமெரிக்காவின் எந்தவொரு மோதலும், எளிதில் உலகளாவிய நெருக்கடியை உண்டாக்கும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் வலுவான ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது, மேலும் சீன பாதுகாப்பு விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி,  இவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.