கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காரில் லிஃப்ட் கேட்பது போல் ஏறி தனியார் நிறுவன மேலாளரிடம் நகை மற்றும் பணம் பரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சார்ந்தவர் சந்தோஷ் கோசி. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் இவர் பூதப்பாண்டிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் நின்று கொண்டிருந்த ஆசிப் என்பவர் இவரது காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். சந்தோஷ் கோஷியும் அவரை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார்.
கார் இறச்சகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு ஆசிப் இறங்கியவுடன் அவரது நண்பர்கள் மாகின் சமீர் மற்றும் அவரது சகோதரர் நசீர் ஆகியோர் சந்தோஷ் கோசியிடம் கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருந்த 2 1/2 சவரன் தங்க செயினை பறித்தனர். மேலும் அவரது செல்போனிலிருந்து 71000 ரூபாய் பண பரிமாற்றமும் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக சந்தோஷ் கோசி அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சமீர் மற்றும் அவரது சகோதரர் நசீர் ஆகியோரை கைது செய்தது. தலைமறைவாக உள்ள ஆசிப் மற்றும் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.