‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா

தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் ஆதிக்கம் மிகவும் குறைவு. சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ் பெண்களும் நடிப்பை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தாமி என்கிற படத்தில் அறிமுகமாகிறார் நடிகை சுவிதா ராஜேந்திரன். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர் எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்தார். இயல்பிலேயே சிறுவயதிலிருந்து இவருக்குள் இருந்த நடிக்கும் ஆசையால் முதலில் மாடலிங்கில் நுழைந்து அதன்பின் தற்போது தாமி என்கிற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார்.

நான்கு பையன்கள் நான்கு பெண்கள் என ஒரு ஜாலியான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுவிதா. இதில் இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இயக்குநர் பிரவீன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

சுவிதா கூறுகையில், “சிறு வயதிலிருந்து எனக்கு கமல் சாரை பிடிக்கும். அதனால் எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. படிப்பை முடித்த பின்பு நடிக்க செல்கிறேன் என்றபோது ஆரம்பத்தில் எனது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சென்னைக்கு வந்து மாடலிங் துறையில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னை சினிமாவுக்கு தயார்படுத்திக் கொண்டேன். கூத்துப்பட்டறை மூலம் நடப்பு பயிற்சியும் பெற்றேன். இந்த படத்தில் இயக்குனர் சொன்னதை செய்துள்ளேன்.

ஒரு பக்கம் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தாலும் படங்களில் நடிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். தற்போது பல பட வாய்ப்புகள் வருகின்றன ஆனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ரசிகர்கள் மனதில் நிற்கும்படியான நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.. அதற்காக காத்திருப்பதிலும் தவறு இல்லை” என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.