கொச்சி: மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள கொரோனா பேப்பர்ஸ் படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது.
ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பேப்பர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் பிரியதர்ஷன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் தான் என்ற நிலை இப்போது மாறியுள்ளதாகவும், அதன் காரணம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா பேப்பர்ஸ்
மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவரது மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தமிழ், மலையாள படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பிரியதர்ஷன் இயக்கியுள்ள கொரோனா பேப்பர்ஸ் திரைப்படம் வரும் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

மலையாளத்தில் ஆபாச படங்கள்
கொரோனா பேப்பர்ஸ் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இயக்குநர் ப்ரியதர்ஷன் கொரோனா பேப்பர்ஸ் உருவான விதம் குறித்து பேசினார். மேலும், மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் தான் என்றிருந்த நிலை தற்போது மாறிவிட்டதாக கூறியுள்ளார்.

மம்மூட்டி, மோகன்லால் தான் காரணம்
அதாவது, மம்முட்டியும் மோகன்லாலும் தான் மலையாள சினிமாவின் இரு தூண்கள். ஒரு காலத்தில் மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் தான் என்ற பார்வை இருந்தது. ஆனால், மலையாள சினிமாவை மரியாதைக்குரியது என மாற்றிய பெருமை மம்மூட்டியையும் மோகன்லாலையும் தான் சேரும். இதனால் இன்றைய தலைமுறையினர் உட்பட அனைவருக்கும் அவர்கள் தான் முன்னோடிகள் எனக் கூறலாம் என்றார்.

மலையாள நடிகை ஷகிலா
இயக்குநர் ப்ரியதர்ஷன் இவ்வாறு பேசுவதற்கு காரணமாக பார்க்கப்படுவது நடிகை ஷகிலா தான் என சொல்லப்படுகிறது. முன்னணி நடிகையாக வர வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்த ஷகிலா, சிலரால் ஆபாச படங்களில் நடிக்க வைக்கப்பட்டார். இதனால் 1994ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏராளமான கவர்ச்சி படங்களில் நடித்தார். மலையாளத்தில் வெளியான இந்தப் படங்கள், ஒருகாலத்தில் மம்மூட்டி, மோகன்லால் படங்களை விடவும் அதிகம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் அவரும் அதுமாதிரியான படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.