அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின், சேலம் பயணமான எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
சேலம் செல்லும் வழியில், தாம்பரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்திய நிலையில், அவருக்கு கிரேன் மூலம் தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் தலைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பளித்தனர்.
தலைவாசலில் உரையாற்றிய இ.பி.எஸ்., நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அதிமுக தலைவர்கள் பாடுபட்டதாகவும், கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறினார்.