மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி இவ்வார இறுதியில் புதிய நிதி ஆண்டின் முதல் நிதி கொள்கையை அறிவிக்க உள்ளது. பணவீக்க விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு குறையாததால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளது. பணவீக்கத்தை மேலும் குறைக்க குறுகியகால கடன் வட்டி விகிதத்தை மேலும் 0.25% ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6 முறை உயர்த்தி உள்ளது.
