Anirudh gift : லியோ பாடல் பாடிய சிறுவன்.. அனிருத் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்தப் படத்தின் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது படத்தின் சூட்டிங் 50 நாட்களை கடந்து காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பாடல்களில் அனிருத்தின் மேஜிக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லியோ படம்

நடிகர்கள் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ. இந்தப் படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். மாஸ்டர் படத்தில் வித்தியாசமான விஜய்யை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய லோகேஷ், இந்தப் படத்திலும் வித்தியாசமான கேங்ஸ்டர் விஜய்யை அறிமுகப்படுத்த காத்திருக்கிறார். படத்தின் 50 நாட்கள் சூட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

இதையடுத்து வரும் 4ம் தேதி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளது. ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலேயே மீதமிருக்கும் சூட்டிங்கை நடத்தி முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4ம் தேதி துவங்கும் சூட்டிங், காஷ்மீரில் நடந்து முடிந்தது போல, ஒரேகட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பான டைட்டில் டீசர்

சிறப்பான டைட்டில் டீசர்

படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டது. விக்ரம் படத்தின் டைட்டில் டீசரில் ஆரம்பிக்கலாங்களா என்ற வார்த்தை சிறப்பாக அமைந்தது போல, லியோ படத்தின் டைட்டில் டீசரில் ப்ளடி ஸ்வீட் அமைந்துள்ளது. இதனிடையே, ஆரம்பிக்கலாங்களா வார்த்தை சரியான இடத்தில் உபயோகிக்கப்பட்டது போலவே, லியோ படத்திலும் ப்ளடி ஸ்வீட் என்ற வார்த்தை சிறப்பாக அமையும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 பாராட்டு மழையில் அனிருத்

பாராட்டு மழையில் அனிருத்

அனிருத் இசையில் லியோ படத்தின் தீம் பாடல் சிறப்பாக அமைந்தது. ஏற்கனவே இந்தப் படம் பல மாதங்களாக ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், இந்தப் பாடல் மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தப் பாடலை இசையமைத்த அனிருத்திற்கும் ரசிகர்கள் அதிகப்படியான பாராட்டுக்களை கொடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ஒன்ஸ் அப்பான் அ டைம் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ளார் அனிருத்.

அமெரிக்காவில் இசைக்கச்சேரி

அமெரிக்காவில் இசைக்கச்சேரி

வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற முதல் நகிழ்ச்சியை தொடர்ந்து நியூஜெர்சியில் நேற்றைய தினம் அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர்களுடன் பேசிய அனிருத், அவர்களுடன் அதிகமான புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது லியோ படத்தின் தீம் பாடலை சிறுவன் ஒருவன் முழு உற்சாகத்துடன் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

லியோ பாடல் பாடிய சிறுவன்

லியோ பாடல் பாடிய சிறுவன்

அந்த சிறுவன் அனிருத் முன்பு இந்தப் பாடலை பாடி முடித்த நிலையில், சுற்றிலும் இருந்தவர்கள் அதிகப்படியான கைத்தட்டலுடன் ஆர்ப்பரித்தனர். இதையடுத்து அவனது பாடும் திறமையை கண்டு பிரமித்த அனிருத், தான் அணிந்திருந்த கூலிங்கிளாசை அந்த சிறுவனுக்கு பரிசாக அளித்து சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். லியோ படத்தை தொடர்ந்து ஜவான், இந்தியன் 2, தலைவர்170, என்டிஆர்30 ஆகிய படங்களில் அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.

அடுத்தடுத்த கச்சேரிகள்

அடுத்தடுத்த கச்சேரிகள்

அமெரிக்காவில் அனிருத்தின் ஒன்ஸ் அப்பான் அ டைம் இசை நிகழ்ச்சி டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் ஆக்லாந்து ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 15ம் தேதிவரை அடுத்தடுத்த இடங்களில் ராக்ஸ்டார் டீமின் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ள அனிருத், இதுபோன்ற இசைநிகழ்ச்சிகளிலும் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.