துபாய்,
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக சென்னை உட்பட 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் கட்டாயம் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நினைப்புடன் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.
Related Tags :