தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்! இவ்வளவு கம்மி விலையிலா?

மத்திய  ரயில்வே தை சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சவுத் ஸ்டார் ரயில் வரும் மே 11ம் தேதி சிறப்பு சுற்றுலாவாக ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கு 12 நாட்கள் சிறப்பு சுற்றுலாவாக புறப்படுகிறது. 

கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், ஏலகங்கா, பெரம்பூர், விஜயவாடா மார்க்கமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. இந்த சுற்றுலாவிற்கு 42000 முதல் 65 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிராவல் டைம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் விக்னேஷ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், நடப்பு கோடை காலத்தை காஷ்மீர் சென்று மகிழ ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு சுற்றுலா பயணத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 14 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயிலில் 600 பயணிகள் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டியின் போது சேலம் ரயில்வே கோட்ட வணிக கண்காணிப்பாளர் சுகுமார் உடன் இறந்தார்.  இந்த வருடம் இந்தியா முழுவதும் சுற்றுலா துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.