புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகம், டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அதில், ‛தமிழகத்தில் கடந்த வாரம் 4.7 சதவீதமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு, நடப்பு வாரத்தில் 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கோவிட் பரிசோதனையை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதர நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement